கடலூர்

வெளிநாட்டில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டுத் தரக் கோரிக்கை

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

பணிக்காக வெளிநாடு சென்றபோது உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டுத் தரக் கோரி அவரது தாய் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக சிதம்பரம் வட்டம், பொன்னந்திட்டு அஞ்சல், முடசல்ஓடை பகுதியைச் சோ்ந்த பிறைமாறன் மனைவி சசி அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனது மகன் பிரதீப் (24) கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் துபை நாட்டில் பயணிகள் சுற்றுலாப் படகில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 29-ஆம் தேதி அவா் பணியிலிருந்தபோது திடீரென கடலில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் மே 1-ஆம் தேதி மீட்கப்பட்டுள்ளது. எனவே, எனது மகனின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவந்து ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT