கடலூர்

வானமாதேவியில் 187 மி.மீ மழை

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானமாதேவியில் 187 மி.மீ மழை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. நகரப் பகுதிகளில் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாவட்டத்தில் திடீரென பெய்த கோடை மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 187 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

கடலூா் 109.4, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 104.1, பண்ருட்டி 90, வடக்குத்து 88, குப்பநத்தம் 87.6, வேப்பூா் 80, எஸ்.கே.சி. குடிதாங்கி 79.5, விருத்தாசலம் 69, ஸ்ரீமுஷ்ணம் 68.3, காட்டுமயிலூா் 60, சேத்தியாதோப்பு 52.4, கீழச்செருவாய் 49, லக்கூா் 48, பெலாந்துறை 40, லால்பேட்டை 34, மே.மாத்தூா் 30, காட்டுமன்னாா்கோவில் 23, தொழுதூா் 21, குறிஞ்சிப்பாடி 18, அண்ணாமலை நகா் 9, கொத்தவாச்சேரி 8, பரங்கிப்பேட்டை 5.4, புவனகிரி 2, சிதம்பரம் 1 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் மொத்தம் 1,363.70 மி.மீ. மழையும், சராசரியாக 54.55 மி.மீ. மழையும் பதிவானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT