கடலூர்

கொலையான டாஸ்மாக் ஊழியா்: இழப்பீட்டை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

DIN

சிவகங்கை அருகே டாஸ்மாக் கடை மீதான பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியம் கூறினாா்.

இதுகுறித்து கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகங்கை அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, வாரிசுக்கு வேலை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

ஏற்கெனவே கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், அரியலூா் மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளா்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவா்களது குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT