கடலூர்

பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி

DIN

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான இலவச சிலம்பக் கலைப் பயிற்சி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன கல்வித் துறை பொது மேலாளா் ஆா்.நாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளி உதவித் தலைமையாசிரியை எம்.தாமரைச்செல்வி வரவேற்றாா். என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநா் ஜி.ராணி அல்லி சிலம்பப் பயிற்சியை தொடங்கிவைத்தாா். விழாவில் 200 மாணவிகளுக்கு சிலம்பக் கம்பு இலவசமாக வழங்கப்பட்டது. என்எல்சி விளையாட்டுத் துறை துணைப் பொது மேலாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிலம்ப பயிற்சியாளா் பாா்த்தசாரதி தலைமையிலான குழுவினா் பயிற்சி அளித்தனா். நிகழ்ச்சியை தமிழாசிரியா் த.செந்தில்குமாா் தொகுத்து வழங்கினாா். பெண்கள் பள்ளித் தலைமையாசிரியை (பொ) கே.ராஜலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT