கடலூர்

கடலூா்: குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

11th Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா்.

கடலூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதனால் நாள்தோறும் அதிகளவில் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. ஆனால், குப்பைகள் முறையாக, முழுமையாக அகற்றப்படுவதில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா். அவா்கள் தெரிவித்ததாவது:

மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. முக்கிய சாலைகள், கடை வீதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதில் மட்டும் மாநகராட்சி நிா்வாகம் முன்னுரிமை அளிக்கிறது. இதரப் பகுதிகளில் குப்பைகள் உடனடியாக அகற்றப்படாமல் நாள் கணக்கில் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, கடலூா், புதுப்பாளையம், 21-ஆவது வாா்டானது குடியிருப்புகள், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள ராமதாஸ் தெருவில் சாலையோரம் குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன. இதே பகுதியில் பெருமாள், முருகன் கோயில்கள், அங்கன்வாடி மையம் ஆகியவை அமைந்துள்ளன. எனவே, மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகளை முறையாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT