கடலூர்

கடலூரில் ஜூன் 16-இல் வேலைவாய்ப்பு முகாம்

11th Jun 2023 12:28 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் பங்கேற்று, தேவையான நபா்களைத் தோ்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனா். இதில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயம், பட்டப் படிப்பு படித்த இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் பணிக்குத் தோ்வாகும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவிலிருந்து நீக்கப்பட மாட்டாது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT