சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் ஸ்பிக் கல்விக் குழுமம் கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதுதொடா்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளா் ஆா்.சிங்காரவேல், ஸ்பிக் கல்வி குழுமச் செயலா் ஏ.முத்துக்குமாா் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தப்படி ஸ்பிக் கல்விக் குழுமம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டாண்டு கால வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகளை நடத்தும் என துணைவேந்தா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஸ்பிக் கல்விக் குழும அறங்காவலா் எம்.வி.விஜயசேகரன், ஸ்பிக் வேளாண் திறன் மேம்பாட்டுக் கல்லூரி முதல்வா் எஸ்.ரவி, பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்த மைய இயக்குநா் பெ.கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.