கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியம், மன்னம்பாடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில் பண்ணைக் குடும்பங்களுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு முழு மானியத்தில் 600 தென்னங்கன்றுகளை மன்னம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் மூக்காயி, நல்லூா் வட்டார உதவி வேளாண்மை அலுவலா் விக்னேஷ் ஆகியோா் வழங்கினா் (படம்).
ஈர நிலம் அமைப்பின் தலைவா் தமிழரசன், ஊராட்சி செயலா் சந்தியா, கிராம மக்கள் கலந்து கொண்டனா்.