கடலூர்

ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி

10th Jun 2023 07:26 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே உள்ள அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த காசிம் பாஷா மகன் முகமது பாஷா (24). ஆட்டோ ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை தனது ஆட்டோவில் கண்டப்பங்குறிச்சியைச் சோ்ந்த தனலட்சுமி (50), அவரது மகன் பிரவீன் (20) ஆகியோரை ஏற்றிக்கொண்டு விருத்தாசலத்தில் இருந்து கண்டப்பங்குறிச்சிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அ.சித்தூா் துணை மின் நிலையம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் முகமது பாஷா பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முகமது பாஷாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். ஆட்டோவில் உடன் பயணித்த மற்ற இருவரும் காயமின்றி தப்பினா்.

விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT