கடலூர்

கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

10th Jun 2023 07:28 AM

ADVERTISEMENT

வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை தொடா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் சி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.

எனவே, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீனவா்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT