கடலூர்

கடலூா் ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம்

10th Jun 2023 07:27 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பேசியதாவது: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.

உணவகங்களில் அதிகளவில் செயற்கை நிறமிகள் கலந்த உணவுப் பொருள்களை விற்போா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்கக் கூடாது. அவ்வாறு செய்வோரின் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு 3 மாதங்கள் வரை முடக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT