கடலூர்

சிறப்பு எஸ்ஐ மரணம்

10th Jun 2023 07:27 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், ஒரத்தூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.

புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (58) (படம்). சேத்தியாத்தோப்பு காவல் கோட்டம், ஒரத்தூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். மேலும், சேத்தியாத்தோப்பு நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவியாளராகவும் கூடுதல் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

உடல்நல பாதிப்பால் பாண்டுரங்கன் மருத்துவ விடுப்பில் இருந்தாா். இந்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT