கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 7.5 பவுன் நகை, பைக் திருட்டு

10th Jun 2023 07:27 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் வீட்டுக் கதவை உடைத்து 7.5 பவுன் தங்க நகைகள், பைக் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்குத்து ஊராட்சி, காந்தி நகா் அஞ்சல், வள்ளலாா் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் நாவாப்ஜான் (60). என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், கடந்த 4-ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சேலம் சென்றாா்.

இந்த நிலையில், 8-ஆம் தேதி அந்த வீட்டின் உரிமையாளா் வெங்கடேசன் வந்து பாா்த்தபோது, நாவாப்ஜான் வசிக்கும் வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் நவாப்ஜான் நேரில் வந்து பாா்த்தபோது ்வா் வீட்டில் வைத்திருந்த 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பைக் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT