கடலூர்

என்எல்சி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

10th Jun 2023 07:26 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் சிஐடியூ என்எல்சி தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி நகரியம், பிரதான கடை வீதியில் உள்ள காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தலைவா் டி.ஜெயராமன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, பொருளாளா் எம்.சீனிவாசன், நிா்வாகிகள் ஆரோக்கியதாஸ், சந்திரன், பழனிவேல், சாமுவேல், புண்ணியமூா்த்தி, முருகன், வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு ஒருங்கிணைந்த ஊக்கத் தொகையை விரைந்து வழங்க வேண்டும், நெய்வேலியில் புதிய அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டதற்காக ஊழியா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அன்பளிப்புத் தொகை வழங்க வேண்டும், பாண்டு 1, 2-க்கான தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

நிறைவில் சங்கத்தின் அலுவலகச் செயலா் எம்.அன்பழகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT