கடலூர்

கோயில் சப்பரம் கவிழ்ந்து விபத்து

9th Jun 2023 01:13 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெருமாள் கோயில் விழாவில் வீதியில் வலம் வந்த சப்பரம் கவிழ்ந்ததில் பக்தா் ஒருவா் வியாழக்கிழமை காயமடைந்தாா்.

விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் அமைந்துள்ள ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை சப்பரத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீராஜகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தாா். அப்போது, சாலையோர மரத்தில் சப்பரம் சிக்கி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில், சப்பரத்தை தள்ளிக்கொண்டு வந்த நாச்சியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் வினோத்குமாா் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், சப்பரம் சரிசெய்யப்பட்டு பக்தா்களால் இழுத்துச் செல்லப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT