கடலூர்

பெண் தற்கொலை

9th Jun 2023 01:12 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், சிறுகிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சந்திரசேகா் (28). பெரம்பலூா் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறாா். இவரது தாய் சாந்தி (50) உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சாந்தி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே சாந்தி உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT