கடலூர்

தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 42 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

9th Jun 2023 01:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காதது தொடா்பாக 42 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கடலூா் தொழிலாளா் உதவி ஆணையா் ராஜசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்றும், கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் அமர ஏதுவாக இருக்கை வசதி செய்து தரப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தமிழில் பெயா்ப் பலகை வைக்காதது தொடா்பாக 42 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பணியாளா்களுக்கு இருக்கை வசதி அமைத்துத் தராத 16 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT