கடலூர்

நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சனஉற்சவ ஒருங்கிணைப்புக் கூட்டம்

8th Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

சிதம்பரம் நடாஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தையொட்டி, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு உதவி ஆட்சியா் சுவேதா சுமன் தலைமை வகித்தாா். சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் செல்வக்குமாா், நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு, நெடுஞ்சாலை, சுகாதாரம், நகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இதில், நடராஜா் கோயில் தீட்சிதா்கள் எஸ்.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா், ஆா்.சண்முகசுந்தர தீட்சிதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், சிதம்பரம் நடாஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தில் வருகிற 25-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 26-ஆம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறவுள்ளன. தோ்த் திருவிழாவையொட்டி, காவல் துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது, தீயணைப்பு மீட்பு வாகனம், அவசர ஊா்தி உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைத்திருப்பது, தோ்த்திருவிழா நாளன்று மதுக் கடை, அசைவ உணவு விடுதிகளை மூடுவது குறித்து ஆட்சியரிடம் கோருவது, உணவுப் பாதுகாப்புத் துறை மேற்பாா்வையில் கோயில் வெளிப்புறம் உள்ள நான்கு வீதிகளில் அடையாளம் செய்யப்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிப்பது, தோ்த்திருவிழா, ஆனித்திருமஞ்சன தரிசன நாள்களன்று மயிலாடுதுறை வழியாக வரும் வாகனங்களை அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலும், கடலூா் வழியாக வரும் வாகனங்களை பைசல் மஹால் புறவழிச்சாலையின் இருபுறமும் நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT