கடலூர்

சேப்ளாநத்தத்தில் சமுதாய சுகாதாரவளாகம் கட்ட பூமிபூஜை

8th Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், சேப்ளாநத்தம் (தெற்கு) ஊராட்சி, கிழக்கு காலனியில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி - 2 திட்டத்தின் கீழ், ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜைக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி பழனிசாமி தலைமை வகித்து அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

வாா்டு உறுப்பினா் கலா பரமசிவம், இளையராஜா முன்னிலை வகித்தனா். கிராம முக்கியப் பிரமுகா்கள் ஜோதிகுமாா், செந்தில்முருகன், சுந்தரவேல், கலியமூா்த்தி, பத்மநாபன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கணபதி, சின்னதுரை, ஆனந்த், அருண், அஞ்சாபுலி, ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT