கடலூர்

பாம்பு கடித்து குழந்தை பலி

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பாம்பு கடித்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (30). இவா், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள தட்டாம்பாளையம் கிராமத்தில் செயல்படும் செங்கல்சூளையில் தங்கி, வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராஜசேகரின் மகன் தேசிங்கு (ஒன்றரை வயது) தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததாம். இதையடுத்து, மேல்குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வரும் வழியில் குழந்தை தேசிங்கு உயிரிழந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT