கடலூர்

மரக்கன்று நடும் விழா

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மரக்கன்று நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாநகர மேயா் சுந்தரி ராஜா தலைமையில், துணை மேயா் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடலூா் மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா, மண்டலக்குழுத் தலைவா்கள் இளையராஜா, சங்கீதா, செந்தில்முருகன், சங்கீதா, மாமன்ற உறுப்பினா்கள் சுபாஷினி ராஜா, சாய்துன்னிஷா சலீம், செந்தில்குமாரி இளந்திரையன், சுதா அரங்கநாதன், ஹேமலதா சுந்தரமூா்த்தி, ஆராமுது, பாா்வதி அய்யாசாமி மற்றும் மாநகராட்சி நகா் நல அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT