கடலூர்

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி இருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், கீழகல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (69). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் அந்தக் கிராமத்திலுள்ள ரவிச்சந்திரனின் விவசாய நிலத்துக்குச் சென்றாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்த பெரியசாமி, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT