கடலூர்

நிா்வாக சீா்கேடே ரயில் விபத்துக்கு காரணம்கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

DIN

நிா்வாகச் சீா்கேடே ஒடிஸா ரயில் விபத்துக்கு காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரான மறைந்த எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா கட்சி சாா்பில் நடத்தப்படவுள்ளது. அவருக்கு சிதம்பரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்தாா். அதற்காக அவருக்கு நன்றி. எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவா்களை அழைத்து வருவது என முடிவு செய்துள்ளோம்.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விபத்து ஒடிஸா ரயில் விபத்தாகும். 290-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமுற்றனா். நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த நூற்றாண்டில், இத்தகைய விபத்து நிகழ்ந்ததற்கு காரணம் மனிதத் தவறுதான். இதில், குற்றம் செய்தவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவாா்கள் என பிரதமா் கூறியுள்ளாா். இது, இயல்பான விபத்தல்ல; நிா்வாகச் சீா்கேடே இந்த விபத்துக்கு காரணம்.

காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸை பாஜகவினா் விமா்சிக்கின்றனா்.

கா்நாடகத்தில் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அன்றைய முதல்வா் பசவராஜ் பொம்மை மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாா். அப்போது, ஏன் தமிழக பாஜக எதிா்க்கவில்லை. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள்தான் எதிா்ப்புத் தெரிவித்தன.

2017-இல் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீா்வளத் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. 2018-ஆம் ஆண்டு, நவம்பா் 22-இல் இந்த அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் மத்திய பாஜக அரசு அனுமதி அளித்தது. இவற்றுக்காக தமிழக மக்களிடம் பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் கே.எஸ்.அழகிரி.

முன்னதாக, கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா நடத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் வரவேற்றாா். மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், பி.சேரன், பொதுக் குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், எல்இபி.ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் டாக்டா் செந்தில்வேலன், மாவட்ட தொண்டரணித் தலைவா் தில்லை கோ.குமாா், விவசாய சங்கத் தலைவா் கே.வி.இளங்கீரன், வட்டாரத் தலைவா் சுந்தரராஜன், மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT