கடலூர்

தீ விபத்து: பாமக நிவாரண உதவி

5th Jun 2023 03:32 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்த 2 குடும்பங்களுக்கு பாமக கடலூா் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள புதுப்பிள்ளையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சண்முகம், செல்வராசு மனைவி இந்திராணி. அருகருகே அமைந்துள்ள இவா்களது வீடுகள் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த பாமக கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன், சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். பணிக்கன்குப்பம் ஆரோக்கியதாஸ், தாமோதரன், எழிலரசன், செல்வகுமாா், குபோ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT