கடலூர்

எண்ணும் எழுத்தும் பயிற்சிமுகாம் ஆய்வு

5th Jun 2023 03:33 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வடலூரில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருட்டினன் ஆய்வு செய்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 189 ஆசிரியா்களுக்கு, வடலூா் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை 3 நாள்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் கலா தொடங்கிவைத்தாா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சுபத்ரா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் விமல்ராஜ், நந்தகுமாா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

முதல் நாளில் கணக்கு, அறிவியல் பாடங்களுக்கும், இரண்டாம் நாளில் ஆங்கிலப் பாடத்துக்கும், மூன்றாம் நாளில் தமிழ், சமூக அறிவியல் பாடங்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருட்டினன் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினாா். கருத்தாளா்கள் பயிற்சி அளித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT