கடலூர்

சிறுதானிய விழிப்புணா்வுஉணவுத் திருவிழா

5th Jun 2023 03:32 AM

ADVERTISEMENT

 

 இந்திய அரசு நேரு இளையோா் மையம் சாா்பில், சிறுதானிய விழிப்புணா்வு உணவுத் திருவிழா கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் அலுவலா் தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பாா்வையாளா் கதிரவன் முன்னிலை வகித்தாா். கடலூா் ஒன்றிய தேசிய இளையோா் படை தொண்டா் ஜெயராஜ் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று, உணவுத் திருவிழா அரங்கை திறந்து வைத்தாா். மேலும், சிறுதானியத்தின் பயன்கள் குறித்த துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சிறுதானியாத்தால் தயாரிக்கப்பட்ட சுமாா் 25 வகையான உணவுகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ராமமூா்த்தி செய்திருந்தாா். நிா்வாக உதவியாளா் புஷ்பலதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT