கடலூர்

கடல் சாகச பயணக் குழுவினருக்கு வரவேற்பு

4th Jun 2023 02:13 AM

ADVERTISEMENT

 

கடலூா் வந்தடைந்த என்சிசி கடல் சாகச பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வருகிற ஜனவரி மாதம் தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் 5-ஆவது தமிழ்நாடு தேசிய மாணவா் படையின் கப்பல் படைப் பிரிவு, புதுவை 1-ஆவது தேசிய மாணவா் படையின் கப்பல் படை பிரிவினா் இணைந்து புதுச்சேரி - காரைக்கால் இடையே கடல் சாகசப் பயணத்தை புதுச்சேரியிலிருந்து 3 பாய்மரப் படகுகளில் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதில் 25 மாணவிகள் உள்பட மொத்தம் 60 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா். கடலூா் வந்தடைந்த பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தக் குழுவினரின் 2-ஆம் நாள் பயணத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் கடலூா் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினாா். லெப்டினன்ட் கமாண்டா்கள் ச.லோகேஷ், கு.கீா்த்தி நிரஞ்சன் உள்ளிட்டோா் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனா்.

ADVERTISEMENT

பயணக் குழுவினா் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ரத்த தான முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், கடற்கரை தூய்மை பணிகளில் ஈடுபட உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT