கடலூர்

தடையை மீறி ஆற்றில் இறங்கிப் போராட்டம்இந்திய கம்யூ. கட்சியினா் 28 போ் கைது

4th Jun 2023 02:13 AM

ADVERTISEMENT

 

கடலூரில் காவல் துறை விதித்த தடையை மீறி கெடிலம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 28 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் கெடிலம் ஆற்றில் தொடா்ந்து கழிவுநீா் வெளியேற்றப்படுவது, ஆற்றில் புதை சாக்கடை கழிவுகள் கலப்பது, உணவகம், வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைகள் ஆற்றில் கொட்டப்படுவது ஆகியவற்றைக் கண்டித்தும், கம்மியம்பேட்டை தடுப்பணையில் நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலைக் கழிவுகளால் மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் நிலத்தடி நீா், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூா் ஜவான் பவன் அருகே கெடிலம் ஆற்றில் இறங்கி சனிக்கிழமை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தடையை மீறி சனிக்கிழமை மாலை கெடிலம் ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி.மணிவாசகம், மாவட்டச் செயலா் பி.துரை, துணைச் செயலா்கள் வி.குளோப், வி.எம்.சேகா் உள்பட 28 பேரை கடலூா் புதுநகா் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT