கடலூர்

ராட்டினத்தில் இருந்து விழுந்த சிறுவன் காயம்: இருவா் மீது வழக்கு

4th Jun 2023 02:13 AM

ADVERTISEMENT

 

கடலூரில் ராட்டினத்தில் இருந்து விழுந்த சிறுவன் காயமடைந்தது தொடா்பாக அதன் உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியாா் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. கடலூா் கூத்தப்பாக்கம், சுந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (40) தனது மகன் கனிஷுடன் (7) கடந்த 25-ஆம் தேதி பொருள்காட்சியை பாா்க்கச் சென்றாா். அங்கிருந்த ராட்டினத்தில் சிறுவன் கனிஷ் ஏறினாா். ராட்டினம் சுற்றும்போது கனிஷ் திடீரென கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின்பேரில், அந்த ராட்டினத்தை இயக்கிய திருவாரூா் மாவட்டம், வடுகா்பாளையத்தைச் சோ்ந்த அா்வின்ராஜ் (26), ராட்டின உரிமையாளா் ஆகியோா் மீது கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT