கடலூர்

சிவபுரி அரசாயி அம்மன் கோயில் தேரோட்டம்

2nd Jun 2023 12:37 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் ஸ்ரீஅரசாயி அம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் தென்பாதியில் உள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீஅரசாயி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 23-ஆம் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விசேஷ அலங்காரத்தில் உற்சவா் அம்மன் எழுந்தருள திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாகப் பவனி வந்து மீண்டும் கோயில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

இன்று புஷ்ப பல்லக்கு: 10 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை வண்ண மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அரசாயி அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. 3-ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT