கடலூர்

கடலூா் மாநகரில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்

2nd Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியை மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேயா் சுந்தரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நகா்நல அலுவலா் (பொறுப்பு) அப்துல் ஜாபா், மண்டலக் குழு தலைவா்கள் பிரசன்னா, சங்கீதா ஆகியோா் முன்னிலையில் வைத்தனா்.

இதில், மாநகராட்சி மேயா் சுந்தரி பங்கேற்று 80 சைக்கிள், 50 பேட்டரி வாகனங்கள், 17 ஆட்டோ, 2 டிராக்டா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்த துப்புரவுப் பணியில் 335 பணியாளா்கள் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிப்பதுடன், அதனை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், மாநகராட்சி பகுதியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் துப்புரவு பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். இதில் மாமன்ற உறுப்பினா்கள் ஆராவமுது, சரஸ்வதி வேலுச்சாமி, சுபாஷ்னி ராஜா, சரவணன், அருள்பாபு, பாலசுந்தா், சுதா அரங்கநாதன், செந்தில்குமாரி இளந்திரையன், மாணவா் அணி துணை அமைப்பாளா் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT