கடலூர்

வேன் மோதி பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

2nd Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வேன் மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வேப்பூா் தாலுகா வன்னாத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த வீரமுத்துவின் மகன் சுரேஷ் (37). இவா் வியாழக்கிழமை காலை ஆசனூரில் உள்ள தனது உறவினா் காதணி விழாவுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேப்பாக்கம்- நல்லூா் சாலையில் ஜக்குபாய் நகா் அருகே சென்றபோது எதிரே வந்த சுற்றுலா வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் இறந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT