கடலூர்

சுருக்குமடி வலை பயன்பாடு: அனுமதி வழங்கக் கோரிக்கை

1st Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

 

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் மீனவா்கள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக கடலூா் மாவட்ட சுருக்குவலை மீன்பிடி தொழிலாளா் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த தேவனாம்பட்டினம், தாழங்குடா, ராசாபேட்டை, சொத்திகுப்பம், எம்ஜிஆா் திட்டு, சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த மனு:

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி மீன்வளத் துறை ஆணையா், முதல்வரின் தனிப் பிரிவு, மீன்வளத்துறை உதவி ஆணையா் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் தீா்வு எட்டப்படவில்லை. எனவே, தற்போது அமலில் இருக்கும் மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT