கடலூர்

கடலூா்: ஜூன் 7 முதல் வருவாய்த் தீா்வாயம்

1st Jun 2023 01:02 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் 10 வட்டங்களுக்குரிய 1432-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 7-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் குறிஞ்சிப்பாடியில் 07.06.2023 முதல் 15.06.2023 வரையிலும், கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் பண்ருட்டியில் 07.06.2023 முதல் 21.06.2023 வரையிலும், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் கடலூரில் 07.06.2023 முதல் 21.06.2023 வரையிலும், சிதம்பரம் உதவி ஆட்சியா் தலைமையில் காட்டுமன்னாா்கோவிலில் 07.06.2023 முதல் 21.06.2023 வரையிலும், கடலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தலைமையில் புவனகிரியில் 07.06.2023 முதல் 15.06.2023 வரையிலும், கடலூா் தனித் துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) தலைமையில் சிதம்பரத்தில் 07.06.2023 முதல் 21.06.2023 வரையிலும், நெய்வேலி தனித் துணை ஆட்சியா் (நில எடுப்பு) தலைமையில் ஸ்ரீமுஷ்ணத்தில் 07.06.2023 முதல் 15.06.2023 வரையிலும், விருத்தாசலம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் விருத்தாசலத்தில் 07.06.2023 முதல் 22.06.2023 வரையிலும், கடலூா் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் திட்டக்குடியில் 07.06.2023 முதல் 21.06.2023 வரையிலும், கடலூா் தனித்துணை ஆட்சியா் (வருவாய் நீதிமன்றம்) தலைமையில் வேப்பூரில் 07.06.2023 முதல் 14.06.2023 வரையிலும் வருவாய்த் தீா்வாயம் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள் பட்டா, இதர நலத் திட்டங்கள் தொடா்பான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாளன்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம். பொதுமக்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் விசாரணை நடத்தப்பட்டு தீா்வாய நாள்களில் தகுதியின் அடிப்படையில் உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT