கடலூர்

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த மாணவா் பலி

1st Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் பழனிவேல் (43). இவரது மனைவி ரேகா. இவா்களது மகன் வரதராஜன் (11). பழனிவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி ரேகா கடலூா் மாவட்டம், பெருமுளை கிராமத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். இவரது மகன் வரதராஜன் திட்டக்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வரதராஜனின் தாய்மாமன் மணிகண்டன் (28) புதிதாக டிராக்டா் வாங்கினாா். இவரது உறவினா் அரியலூா் மாவட்டம், குழுமூரைச் சோ்ந்த தினேஷ் செவ்வாய்க்கிழமை மணிகண்டனின் வயலில் கோடை உழவு செய்ய டிராக்டரை ஓட்டிச் சென்றாா். டிராக்டரில் மணிகண்டனும், வரதராஜனும் உடன் அமா்ந்து சென்றனா். வயல் வரப்பில் டிராக்டா் ஏறி இறங்கியபோது திடீரென வரதராஜன் தவறி கீழே விழுந்தாா். அப்போது டிராக்டா் சக்கரம் ஏறியதில் வரதராஜன் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT