கடலூர்

தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்

17th Jul 2023 01:44 AM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையங்களின் சாா்பில், தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அண்மையில் செய்து காண்பிக்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் தனியாா் நிறுவனத்தில், அதன் நிா்வாக இயக்குநா் டி.கே.ஏ.காா்த்திக், மேலாளா்கள் ஏ.விஜயகுமாா், ஜி.வி.மகாதேவன் முன்னிலையில், அந்த நிறுவனத்தின் தொழிலாளா்களுக்கு பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் நா.வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீத்தடுப்பு, பேரிடா் கால மீட்பு குறித்த விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொக்குவரத்து) ரெ.உத்திராபதி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT