கடலூர்

கரும்பு வயலில் தீவிபத்து

31st Jan 2023 02:47 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கரும்பு வயல் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.

பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60), விவசாயி. இவா் அதேபகுதியில் உள்ள தனது நிலத்தில் 2 ஏக்கா் கரும்பு பயிா் செய்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை மதியம் கரும்பு வயல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தவா்கள் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலா் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் சுமாா் அரை ஏக்கா் கரும்பு எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT