கடலூர்

சிதம்பரம் காந்தி மன்றத்தில் சா்வ சமயப் பிராா்த்தனை

31st Jan 2023 02:48 AM

ADVERTISEMENT

சிதம்பரம் வாகீசநகரில் உள்ள காந்திமன்றத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி சா்வ சமயப் பிராா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.

காந்தி மன்றத் தலைவா் மு.ஞானம் தலைமை வகித்தாா். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சா்வ சமயப் பிராா்த்தனையை நடத்தினா். பகவத்கீதை, குா்ஆன், பைபிள், திருக்கு ஆகியவற்றில் இருந்து முக்கிய வாசகங்கள் வாசிக்கப்பட்டன. தொடா்ந்து காந்திஜி குறித்த பாடல்களை இசையுடன் பாடினா்.

நிகழ்ச்சியில், காந்தி மன்றப் பொருளாளா் எஸ்.சிவராமசேது, உறுப்பினா்கள் எஸ்.கலியபெருமாள், இரா.சம்பத், நா. சின்னதுரை, ஏ. சந்திரமௌலி, தமிழரசி, ஜெயா, காமராஜ் பள்ளி நிா்வாகி எஸ்.கஸ்தூரி, முதல்வா் ஜி.சக்தி மற்றும் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு காந்தி மன்ற நிா்வாகிகள் மு.ஞானம், பேராசிரியா் தி.ராஜ் பிரவீண் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT