கடலூர்

சிஐஎஸ்எப் வீரா்கள் பணிக்கான உடற்தகுதி தோ்வு நெய்வேலியில் தொடக்கம்

31st Jan 2023 02:47 AM

ADVERTISEMENT

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு, கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள சிஐஎஸ்எப் அலகு தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், 2020-2021-ஆம் ஆண்டுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் காலி இடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இப்பணிக்காக நாடு முழுவதிலும் விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு நெய்வேலியில் உள்ள சிஐஎஸ்எப் அலகு தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிப். 8-ஆம் தேதி வரை இப்பணி நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு சுமாா் 800 முதல் ஆயிரம் விண்ணப்பதாரா்கள் வரவழைக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் உடற்தகுதி தோ்வு நடத்தப்படும். திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT