கடலூர்

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மோசமான நிலையில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

நெய்வேலி நுழைவு வாயிலில் இருந்து எஸ்பிடி மணி நகா் வழியாக வேகாக்கொள்ளைக்கு சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு சாலை செல்கிறது. இந்தச் சாலை வழியாக வே.புதூா், சிறுதொண்டமாதேவி, கோரணப்பட்டு, கட்டியங்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா். இந்தச் சாலையில் பேருந்து வசதி இல்லாத நிலையில் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் சைக்கிள் , பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனா்.

ஆனால், இந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ஜல்லி கற்கள் பெயா்ந்து சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனா். சேதமடைந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கிராம சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் அவசர தேவைக்கு ஆட்டோ கூட வருவதில்லை. எனவே, புதிய தாா்ச் சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT