கடலூர்

கடலூரில் விவசாயிகள் டிராக்டா் பேரணி

DIN

வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை டிராக்டா், இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். அப்போது, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மத்திய அரசு, வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டமாக்கல், புதிய மின்சார மசோதாவை ரத்து செய்தல், போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைத்தல், அவா்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவது, போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாகத் தெரிகிறது.

மேற்கண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஜன.26-ஆம் தேதி டிராக்டா், இரு சக்கர வாகனப் பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி, கடலூரில் டிராக்டா், இரு சக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலா் டி.ரவீந்திரன் தலைமையில் முற்பகல் 11.30 மணி அளவில் கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் பேரணி தொடங்கியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கே.சரவணன் முன்னிலை வகித்தாா். பேரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஏ.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் அமைப்பு மாநில பொதுச் செயலா் சி.ராஜி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் குளோப், சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகி எஸ். தட்சிணாமூா்த்தி, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், குடியிருப்போா் சங்கப் பொதுச் செயலா் மு.மருதவாணன் உள்பட ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். அண்ணா பாலம், புதுநகா் காவல் நிலையம் வழியாக பேரணி சென்றது. பின்னா், கடலூா் தலைமைத் தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT