சிதம்பரத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சிதம்பரம் வானக்காரத் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சக்திவேல் (55). பத்தராக வேலை செய்து வரும் இவா் சனிக்கிழமை இரவு தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால் சக்திவேல் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
உயிரிழந்த சக்திவேலுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.