கடலூா் மாவட்டம், திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மூலவா் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகைப் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழப் பந்தலில் புல்லாங்குழலுடன் பிருந்தாவன கண்ணனாக (வேணுகோபாலன்) காட்சியளித்தாா். உற்சவா் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கண்ணாடி அறையில் காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.