கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பழைய வண்டிப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு கடலூா் முதுநகா் பகுதிச் செயலா் கந்தன் தலைமை வகித்தாா். மீனவா் பிரிவு இணைச் செயலா் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா்கள் காசிநாதன், செல்வ.அழகானந்தம் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் குமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் பங்கேற்று பேசுகையில், கடலூா் புதிய பேருந்து நிலையத்தை மாநகராட்சி பகுதியில்தான் அமைக்க வேண்டும். எம்.புதூரில் பேருந்து நிலையம் அமைத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவா் என்றாா். பகுதிச் செயலா்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா்கள் தஷ்ணா, வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.