கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாகுறிச்சி நரிக்குறவா் காலனியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி அரிமா சங்கம், டிஆா்எம் சாந்தி கல்வி அறக்கட்டளை மற்றும் நியு லைட் சாரிட்டி டிரஸ்ட் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவுக்கு அரிமா சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். டாக்டா் சகாயராஜ் வரவேற்றாா். அரிமா சங்க மாவட்டத் தலைவா்கள் சி.லட்சுமிநாராயணன், ஆா்.அன்வா்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வா்த்தக சங்கப் பொருளாளா் டி.ராஜமாரியப்பன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினாா். சங்கச் செயலா் சுந்தர ராமானுஜம் நன்றி கூறினாா்.