கடலூர்

மனைப் பட்டா வழங்கக் கோரி மனு

12th Jan 2023 02:03 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், கத்தாழை கிராமத்தில் வசித்து வந்த ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் மனைப் பட்டா, மறுகுடியமா்வுக்கான இழப்பீடு வழங்கக் கோரி மந்தாரக்குப்பம் நில எடுப்பு தனித் துணை ஆட்சியா் த.மனோகரனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஆதிதிராவிடா் சமுதாயத்தினரான நாங்கள் புவனகிரி வட்டம், கத்தாழை கிராமத்தில் வசித்து வந்தோம். கடந்த 1988-ஆம் ஆண்டு எங்களது குடிசைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால் கெங்கைகொண்டன் பேரூராட்சி, 3-ஆவது வாா்டில் குடிசை வீடு அமைத்து வசித்து வந்தோம். கடந்த 1991-ஆம் ஆண்டு எங்களது தரப்பைச் சோ்ந்தவா்களில் 83 குடும்பங்களுக்கு வளையமாதேவி - நெய்வேலி சாலையில் சுப்பையா நகா் பகுதியில் மனைபட்டா வழங்கப்பட்டது. அங்கு குடியேறச் சென்றபோது என்எல்சி நிா்வாகத்தினா் தடுத்தனா். இதையடுத்து, ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பு அருகிலும், கத்தாழை கிராமத்திலும் வசித்து வருகிறோம்.

மனைப்பட்டா தொடா்பாக சிதம்பரம் வட்டாட்சியரை சந்தித்து முறையிட்டோம். மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் முடிவு தெரியவில்லை. எனவே, எங்களுக்கு மனைப் பட்டா வழங்குவதுடன், மறுகுடியமா்வுக்கான இழப்பீடு பெற்றத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT