கடலூா் மாநகராட்சியில் 4 அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மாா்ட் கிளாஸ்) புதன்கிழமை திறக்கப்பட்டன.
கடலூா் மாநகராட்சியில் புதுப்பாளையம், ரெட்டிச்சத்திரம், வேணுகோபாலபுரம், கடலூா் துறைமுகம் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளிகளில் கல்வி நிதியிலிருந்து ரூ.39.60 லட்சத்தில் திறன்மிகு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த வகுப்பைகள் திறப்பு விழாபுதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன் தலைமை வகித்தாா். துணை மேயா் பா.தாமரைச்செல்வன், பொறியாளா் மகாதேவன், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, பள்ளித் தலைமை ஆசிரியை ஷீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா கலந்துகொண்டு திறன்மிகு வகுப்பறையை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் இளஞ்செழியன், கல்விக்குழுத் தலைவா் ராஜ்மோகன், மண்டல குழுத் தலைவா் சங்கீதா, திமுக மாணவரணி துணை அமைப்பாளா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.