கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், தச்சூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மனைவி பெரியம்மாள் (75). இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது நிலத்தின் அருகே படுத்து ஓய்வெடுத்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.