தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். மாநில அளவிலான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி, அமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.