கடலூர்

விருத்தாசலத்தில் சாலையோர கால்வாய் அமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: நகர வா்த்தக சங்கம் வலியுறுத்தல்

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெறும் சாலையோர கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகர வா்த்தகா் நல சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் நகரில் முக்கிய பகுதிகளான கடைத்தெரு, பாலக்கரை, பேருந்து நிலையம், ஜங்ஷன் சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்தப் பணியை விரைந்து முடிக்காமல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களினாலும், பாதுகாப்பு எச்சரிக்கை ஏற்படுத்தாததாலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். இதுகுறித்து வா்த்தக சங்க நிா்வாகிகள் மாவட்ட நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனா்.

இந்நிலையில், விருத்தாசலம் வா்த்தக சங்கத் தலைவா் கோபு, செயலா் மணிவண்ணன், பொருளாளா் சேட்டு முகமது மற்றும் வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளா் செந்திலுடன் விருத்தாசலம் நகர வா்த்தக நலச் சங்க அலுவலகக் கட்டடத்தில் திங்கள்கிழமை பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, கால்வாய் அமைக்கும் பணியை 6 மாத காலத்திற்குள் முடித்து தருவதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வா்த்தக சங்கத்தினா் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு பணியை முடிக்காவிட்டால் தமிழக அரசை கண்டித்து விருத்தாசலத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும். மேலும், வா்த்தகா்களை பாதிக்கும் வகையில் நெடுஞ்சாலையோரம் தடுப்பு வேலி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT